Sunday, June 22, 2014

First Centum - Fourth Decad

|| Om Namo Narayanaya ||



 In this decad, Sri Nammalwar gets into the personality of a woman who pines for the Lord. He takes on the roles of  Lord's lover, mother and friend. Sri Nammalwar is identified by the name "Paraankusa Nayagi". His deep affection for the Lord and forgetting himself completely and the powerful presence of the Lord made him feel like a woman and the songs reflect very well the state he was in.

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்றெனக்கருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் வீடு தூது சென்றக்கால்
வன் சிறையிலவன் வைக்கில் வைப்புண்டாலென் செய்யுமோ.

Ye young, sympathetic Stork, with pretty plumes, taking pity on poor me, go with your male partner and deliver my message to the Lord on whose banner Is (Garuda) that bird with formidable plumes; If perchance He puts you in prison tough, what does it matter if you were to suffer on my behalf?


அம் சிறைய --அழகிய சிறகுகளுடைய 
மடம் --இளமை  தங்கிய 
நாராய் --நாரைப்  பறவையே 
அளியத்தாய் --தயை  பண்ணுதற்கு உரியாய் 
நீயும் --நீயும் 
நின் --உன்னுடைய 
அம்  சிறைய சேவலுமாய் --அழகிய சிறகுகளையுடைய ஆணுமாய் 
ஆ ஆ  என்று  எனக்கருளி --ஐயோவென்று என் விஷயத்தில் அருள் கூர்ந்து 
வெம் சிறை புள்ளுயர்த்தார்க்கு --விரோதி பயங்கரமான சிறகுகளையுடைய  கருடனை கொடியில் சின்னமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு 
என் விடு தூது ஆய் --என்னால் விடப்பட்ட தூதாய் 
சென்றக்கால் --போனால் 
அவன் --அந்த எம்பெருமான் 
வன் சிறையில் வைக்கில் --கடினமான சிறையில் வைத்திட்டால் 
வைப்புண்டால் --அதை நீ அனுபவித்திருப்பாயானால் 
என் செய்யும் --என்ன கெடுதல் உண்டாகும் ?


=====****=====

என் செய்ய தாமரைக்கண்  பெருமானார்க்கென் தூதாய் 
என்செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே 
முன்செய்தமுழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் 
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே.


Preamble
The love-intoxicated Alwar beckoned the stork pair, in the preceding stanza, to carry a message to the Lord but the contents.of the message are now revealed by him to a band of Koels. This kind of confusion only reveals the intensity of the Alvar's God-love,the ecstatic imbalance of mind.

Translation
Oh, you happy band of  Koels, what will unto you  happen if you conveyed my message to my lotus-eyed Lord? Well, aren't you the familiar lot? should it be decreed that I, who, from His service, did all these days abstain because of my past sins, be still kept away from His feet?


இனம் குயில்காள் --கூட்டமான குயில்களே!
என் --என்னுடைய 
செய்ய தாமரைக் கண் --செந்தாமரை மலர்களைப் போன்ற திருக் கண்களையுடைய 
பெருமானார்க்கு --எம்பெருமானுக்கு 
என் தூது ஆய் --
நான் விட்ட தூதாகி 
உரைத்தக்கால் 
--சென்று விஷயத்தை அறிவித்தால் 
என் செய்யும் --(அந்த செயல் உங்களுக்கு) என்ன தீமையை விளைவிக்கும் ?
நீர் அலிரே --(நெடு நாளாகப் பழகிப் போந்த ) நீங்கள் அல்லீர்களோ ?
முன் செய்த --முற் பிறப்பில் செய்த 
முழு வினையால் --பெரும் பாவத்தினால் 
திரு அடி கீழ் --திருவடிகளிலே 
குற்றேவல் செய்ய --கைங்கர்யம் பண்ணுவதற்கு 
முன் முயலாதேன் ?--முன்னம் முயற்சி செய்யாத நான் 
இனம் --இன்னமும் 
அகல்வதுவோ விதி --விலகி இருப்பதுவா  முறை? 


                                                                   =====****=====

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள் 
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு 
மதியிலேன் வல்வினையே மாளாதோவென்று     ஒருத்தி 
மதியெலாமுள்  கலங்கி மயங்குமாலென்னீரே. 

You lucky pair of Swans, with gentle gait, go and tell Him who, as the midget  (Vamanaa), covertly got a donation of the worlds,  that here lies one , whose sins are inexhaustible, is in a terrible state of mental imbalance.

விதியினால் --பாக்ய வசத்தினால் 
பெடை மணக்கும் --பேடையோடு கூடிக் களித்திருக்கும் 
 மெல் நடைய --மெல்லிய நடையை உடைய 
அன்னங்காள் --அன்னப் பறவைகளே 
மதியினால் --புத்தியினால் 
குறள் மாணாய் --வாமா  ப்ரமசாரியாய் 
உலகு இரந்த --உலகங்களை யாசித்த 
கள்வர்க்கு --கபடமுடைய  பெருமானுக்கு 
மதியிலேன் --புத்தியில்லாத என்னுடைய 
வல் வினையே மாளாது --பெரிய பாவந்தானோ முடியாதிருப்பது 
என்று --என்று சொல்லி 
ஒருத்தி --ஒரு பெண்ணானவள் 
மதி எல்லாம் உள் கலங்கி --புத்தியானது முழுவதும் கலங்கப் பெற்று 
மயங்கும் --அறிவழிந்து கிடக்கின்றாள் 
ஆல்  என்னீர் --அந்தோ!  என்று  உரைப்பீர் 


                                             ====*****====

என் நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத 
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லியான் சொல்லுகேனோ 
நன்னீர்மை இனியவர்கண் தங்காதென்றொருவாய்ச்சொல் 
நன்நீலமகன்றில்காள்  நல்குதீரோ நல்கீரோ.

Nammalwar as Parankusa Nayagi was expressing her state to the Cakravaka birds Anril in tamil , from the duck family). Some of the birds offered her help. She being in a dejected state of mind, due to the aloofness of her beloved (the Lord) was not hopeful that her message sent via the birds will have any impact on the Lord. And yet, she asked the blue birds to apprise the Lord of her precarious condition, with little or no chance of survival.


என் நீர்மை கண்டு --எனது ஸ்வபாவத்தை பார்த்திருந்தும் 
இரங்கி --மனமிரங்கி 
இது தகாது என்னாத --இப்படி நாம் பிரிந்திருப்பது சரியல்ல என்றிராமல் 
என் நீல முகில் வண்ணர்க்கு --நீல மேகம் போன்ற நிறமுடைய எம்பெருமானுக்கு 
என் சொல்லி யான் சொல்லுகேனோ --என்ன சொல்லப் போகிறேனோ  
இனி அவர்கண் --இனி (பராங்குச நாயகியான ) அவளிடத்தில் 
நல்  நீர்மை --நல்லுயிர் 
தங்காது --தங்கியிருக்க மாட்டாது 
என்று ஒரு வாய் சொல் --என்றொரு வாய்ச்  சொல்லை 
நல் நீலம் மகன்றீர் காள் --நல்ல நீல  நிறத்தை உடைய மகன்றில் பறவைகளே 
நல்குதீரோ நல்கீரோ --எம் பெருமானிடத்தில்  சொல்லுவீர்களோ மாட்டீர்களோ ?


                                                      ====****====

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே
நல்கத்தா னாகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப்  புனற்படப்பை யிரைதேர்வண் சிறுகுருகே
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண்  டருளாயே.

Ye little lovely heron, seeking food in water logged flower gardens,  when you behold Naranan, the sole sustainer of the seven worlds, will you tell Him that here is one with tearful eyes, a sinner He can't throw down, and bring back any reply he chooses to send ?


நல்கித்தான்--தான் விரும்பி 
காத்தளிக்கும்--அனைத்து  ஜீவராசிகள் உள்ளிருந்து  காக்கும் 
பொழிலேழும்--அழகிய  ஏழு உலகங்களையும் 
வினையேற்கே--தான் விரும்பியவனாக , அந்த உலகங்களுக்கு விருப்பமற்றவற்றை தானே நீக்கியவனாக 
நல்கத்தான் ஆகாதோ --எனக்கு திருவருள் புரிந்தால் ஆகாதோ ? என்று 
நாரணனை --எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை 
கண்டக்கால் --காண நேர்ந்தால் 
மல்கு நீர் புனற் படப்பை --மிகுதியான தண்ணீரை உடைய தோட்டங்களில் 
இரை தேர் வண் சிறு குருகே--இரையாக உள்ள சி று மீன்களைத்  தேடுகின்ற குருகே (நீர்ப் பறவை)
மல்கு நீர் கண்ணேற்கோர்--மிகுதியான கண்ணீரால் நிரம்பிய கண்களைக் கொண்ட 
வாசகங் கொண்டருளாயே --என்னிடம் கூற வேண்டும் 

                                                      ====****====

அருளாத நீரருளி யவராவி துவராமுன் 
அருளாழிப் புட்கடவீ ரவர்வீதி யொருநாளென்று 
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி 
அருளாழி வரிவண்டே யாமுமென் பிழைத்தோமே.


You lovely bee! if you meet my gracious Lord,Pray tell Him, although He didn't relent thus far, He should shed  His grace on me before  my  ife departs, And just pass some day through this street, Mounting the gracious bird (Garu{a); I shall then steal a glance at Him. Oh!what is my fault ?


ஆழி  வரி வண்டே --வட்டமான ரேகைகளை உடைய வண்டே 
அருள் ஆழி அம்மானை --அருள் சுடரான எம்பெருமானை 
கண்டக்கால் --அவரைக் கண்டபொழுதில் 
அருளாத நீர் --கிருபை பண்ணாத நீர் 
அருளி --அருள் செய்து 
அவர் ஆவி துவாரமுன் --அவருடைய (ஆழ்வாருடைய )  உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னமே 
அருள் ஆழி --கருணைக் கடலான பெரிய திருவடியை 
அவர் வீதி --அவர் இருக்கிற வீதியில் 
ஒரு நாள் --ஒரு நாளாயினும் 
கடவீர் என்று --கடத்துவீராக  என்று 
இது சொல்லி --இந்த வார்த்தையைச் சொல்லி 
அருள் --கிருபை பண்ண வேணும் 
யாமும் --நாமும் 
என் பிழைத்தோம் ?--என்ன குற்றம் செய்தோம் 

                                                         ====****====

என்பிழை கோப்பதுபோலப் பனிவாடையீர்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கென்றொரு வாய்சொல்
என்பிழைக்குமிளங்கிளியே யான்வளர்த்த நீயலையே.


Here am I, tormented by the spine-chilling blast.  Ye young parrot, ain't you the one I reared ?   What'll go wrong with you, if you went and enquired of ' Tirumal ', who looks solely on rny faults and sheds  not His grace on me. What is precisely my fault that admits not His clemency.

என்பு --எலும்பிலே 
இழை--நூல் இழையை 
கோப்பது போல --நுழைப்பதைப்  போல் 
பனி  வாடை --குளிர்ச்சி பொருந்திய  வாடைக் காற்று 
ஈர்கின்ற --வருத்துகின்றது 
என் --(இப்படி  வருந்துகின்ற ) என்னுடைய 
பிழையே --குற்றங்களையே 
நினைந்தருளி --எண்ணி 
அருளாத --கிருபை  பண்ணாதிருக்கிற 
திரு மாலார்க்கு --லக்ஷ்மி நாதனுக்கு (லக்ஷ்மி நாதனிடம் சென்று )
திருவடியின் --ஸ்வாமியான தேவரீருடைய 
தகவினுக்கு --கிருபைக்கு 
என் பிழைத்தான் என்று --(பராங்குச நாயகி ) என்ன  பிழை  செய்து விட்டாள் என்று 
ஒரு வாய் --ஒரு வார்த்தை 
சொல் --சொல்ல வேணும் .

===***===

நீயலையே சிறுபூவாய் நெடு மாலார்க்கென் தூதாய் 
நோயெனது  நுவலென்ன. நுவலாதே யிருந்தொழிந்தாய் 
சாயலொடு மணிமாமை  தளர்ந்தேன் நான் இனியுனது 
வாயலகில் இன்னடிசில்  வைப்பாரை நாடாயே.


நாடாத மலர்நாடி  நாள்தோறும்  நாரணன்தன்.
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று.
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ ?
ஊடாடி பனி வாடாய். உரைத்தீராய் எனதுடலே.

உடலாடிப் பிறப்பு வீடுயிர் முதலா முற்றுமாய்.
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கா  லிதுசொல்லி
விடலாழி மட நெஞ்சே. வினையோமொன்  றாமளவே.

அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியந்த அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.



Wednesday, April 16, 2014

Sri Nammalwar's Thiruvaimozhi . First .Decad


 || Om Namo Narayanaya ||

Sri Nammazhwar poured out the essence of the four Vedas in the form of Tamil poems in four compilations namely: Thiruvaimozhi, Thiruvasiriyam, Thiruviruthham and Periya Thiruvandhadhi. Thiruvaimozhi is the equivalent of Saama Veda.

Sri Nammazhwar was consumed by the contemplation of Lord Krishna from a very young age and meditated under a tamarind tree for 16 years in the place called Azhwar Thirunagari in south Tamil Nadu. The holy tamarind tree exists even today and is more than 1000 years old!


The poems are divine, rhythmic and pouring out from higher planes of consciousness with profound knowledge. I have just attempted to bring together the lyrics in Tamil and translation in english which have been taken from books  written by great souls.








First Centum - First Decad

  

He, The One, who is the natural repository of super-excellent traits
He, The One who removes all the fatigue and who unto me vouch safed wisdom-love
He, The One, who is the Lord of the ever-alert Eternal Heroes*
He, The One, whose dazzling, distress-dispelling feet*,  rids me of my ignorance and lifts my soul.

Eternal Heroes are the Nitya Suris : Ananta, Garuda, Visvaksena and other celestials who are always with the Lord serving him.

Surrendering at the Feet of the Lord is the only way for salvation and this is repeated in many poems in Nalayira Divya Prabandham

என் மனனே!--எனது மனமே !
உயர்வு  அற--( தன்னைப்  பார்க்கிலும் ) உயர்த்தி  இல்லாத
உயர்--உயர்ந்த
நலம்--கல்யாண குணங்களை
உடையவன்--கொண்டுள்ளவன்
யவனவன்--யாவன்  ஒருவனோ
மயர்வற--அஞ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம்--ஞானத்தையும்  பக்தியையும்
அருளினன்--வழங்கியவன்
அயர்வு  அறும்--மறப்பு  இல்லாத
அமரர்கள்--நித்ய  சூரிகளுக்கு
அதிபதி அவன்--ஸ்வாமி ஆனவன்
அவன்--எம் பெருமானுடைய
துயர்  அறு--துக்கங்களை போக்குகின்ற
சுடரடி--ஜோதி மயமான திருவடிகளை
தொழுது--வணங்கி
எழு--உயர்  கதி அடைவாய்
        

====***====


The Supreme Lord, is outside the ken of comprehension of even the most thoroughly cleansed mind of the Yogi. He is beyond the grasp of senses.
He is peerless at all times: past, present and future, the embodiment of bliss and knowledge in their perfection. He is my good soul. O my mind, lift yourself up to the dazzling, distress-dispelling feet of such a Great One

மனனகம்
--
மனத்திலே  இருக்கிற
மலம் அற--காமம்  கோபம்  முதலிய  தீக்குணங்கள்  கழிய  கழிய  (அதனால்)
மலர்--மலர்நததாகி
மிசை எழு தரும்--மேலே  மேலே  விருத்தி அடைகிற
மனன் உணர்வு--மனத்தில்  ஞானம்  என்கிற யோக உணர்ச்சியால் 
அளவிலன்--அளவிடப்படாதவனும் 
பொறி உணர்வு அவை இலன்--மெய் (உடல் ) , வாய் , கண் , மூக்கு போன்ற      வெளி இந்திரியங்களின்  ஞானத்தினால் அளவிடப்படாதவனுமாய் 
இனன்--இப்படிப்பட்டவனும்
உணர் முழு நலம்--பரி பூரண   ஞாநானந்த   ஸ்வரூபியும்
எதிர் நிகழ் கழிவினும்--எதிர் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களிலும்
இனன்  இலன்--ஒப்பு  இல்லாதவனும்
மிகு நரை இலன்--மேற் பட்டவர்  இல்லாதவ னுமாய் இருப்பவன்
        

   ====***====


Could He be said to possess that one and not this other thing ? No. He pervades, without intermission, the entire Universe, the region high up as well as those below the earth at all times; He abides in all non-sentient things (matter), having form and size, as well as the formless sentient beings within them all (individual souls). Yet, He is beyond the grasp of the senses. Blessed are we to have Him, who is peerless glory!


அது இலன் ( என )
--
அந்தப்பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என--இந்தப்பொருளை உடையவன் என்றும்
நினைவு அரியவன்--<நினைப்பதற்கு அருமைப்  பட்டவனாகியும்
நிலன் இடை--பூமி  முதலான  கீழ் உலகங்களிலும்
விசும்பு  இடை--ஆகாயம்  முதலான மேல் உலகங்களிலும்
உருவினன்--ரூபமுடையவன் (ரூபமுள்ள பொருள்களை உடையவனென்றும் கொள்ளலாம். நிலனிடை உருவினன்) 
அருவினன்--ரூபமற்றவன் (விசும்பிடை - அருவினன்)
புலனொடு --புலன்களால் உணரப்படுகிற விஷயங்களில் கலந்துள்ளான்
புலன் அலன்--புலன்களுக்கு  அப்பாற்பட்டவன்
ஒழிவு இலன்  பரந்த--இடைவெளி  இல்லாமல்  எங்கும்  நிறைந்துள்ள
அந்நலன் உடை ஒருவனை --மேற்  சொன்ன கல்யாண குணங்களை உடைய ஒப்பற்ற  எம்பெருமானை 
நாம் நணுகினம்--நாம் கிடைக்கப் பெற்றோம்
        

====***====

 We, the masculine beings over here, there and near,  the feminine beings similarly and all things seen collectively here, there and everywhere, those that can be pointed out individually as this, that and the other; non-sentient things good, bad, perishable and imperishable; things that were, are and will be : All these subsist in Him (meaning these are sustained, directed and controlled by Him)

நாம்--தன்மைப்  பொருள்
அவன் இவன் உவன்--ஆண் பாலைச் சுட்டிக் காட்டும் பொருள்களும்
அவள் இவள் உவள்--பெண்  பாலைச் சுட்டிக் காட்டும் பொருள்களும்
எவள்--பெண் பால்  வினாப் பொருளும்
தாம்--பன்மை 
அவர் இவர் உவர்--பலர் பால்  சுட்டுப் பொருள்களும்
அது இது உது--ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும் 
எது--ஒன்றன் பால் வினாப் பொருளும்
வீம் அவை--நசிக்கும் தன்மை உள்ள பொருள்களும்
இவை உவை அவை--பலவின் பால் சுட்டுப் பொருள்களும்
நலம் அவை--நல்லவையும்
தீங்கு அவை--கெட்டவையும்
ஆம் அவை--எதிர் காலப் பொருள்களும்
ஆய அவை--இறந்த காலப் பொருள்களும்
ஆய் நின்ற--ஆகி  நின்ற  எல்லாப் பொருள்களும்
அவரே--அந்த எம்பெருமானேயாம்

                               
====***====


Different grades of people with varying degrees of spiritual knowledge and calibre, seek favors from minor deities (Agni, Indra and so on), whom they propitiate as their God. If those Gods bestow the boons sought by their devotees,  to the extent deserved by them, It is only due to the grace of the Supreme Lord (Sriman Narayana)  who stays inside these deities (as their internal controller)  and maintains them.

அவர் அவர்--அந்தந்த மக்கள்
தமதமது--தங்கள்  தங்களுடைய
அறிவு--ஞானத்தாலே
அறி--அறியப் படுகிற
வகைவகை--பல பல படிகளாலே 
அவரவர்--அந்தந்த  தெய்வங்களை
இறையவர் என--ஸ்வாமிகள்  என்றெண்ணி
அடி  அடைவர்கள்--வணங்குவர் 
அவரவர் இறையவர்--அந்தந்த  மக்களால்  வணங்கப்படுகிற  தெய்வங்கள்  (தேவதைகள்)
குறைவு இலர்--அவரவர்கள் விரும்பின பலன்களை கொடுப்பதில் குறை வைப்பதில்லை (ஏனெனில்)
இறையவர்--எம்பெருமானான  ஸ்ரீமன் நாராயணன்
அவர் அவர்--அந்தந்த மக்கள்
விதிவழி--தங்கள் விதிப்படி
அடைய--பலன் பெரும்படியாக
நின்றனர்--(அந்தந்த  தேவதைகளுக்கு )  அந்தர்யாமியாக   எழுந்தருளியுள்ளான்
        

====***====

 We have it on the firm authority of the Vedas, that it is our Supreme Lord, who controls and sustains the different postures of standing, sitting, lying and wandering about, of one and all, as well as their abstinence there from, Himself being immutable (undergoing no change what-so-ever) and yet beyond specific scrutiny and comprehension.

நின்றனர்--நிற்பவர்கள்
இருந்தனர்--இருப்பவர்கள்
கிடந்தனர் --கிடப்பவர்கள்
திரிந்தனர்--திரிபவர்கள்   (ஆக  இப்படிப்பட்ட நிற்றல் , இருத்தல் , கிடத்தல் , திரிதல்  போன்றவை  வெளி உலக ஈடுபாட்டை(ப்ரவ்ருத்தி ) குறிப்பவை. இவை அனைத்திலும் பெருமான் வசிக்கிறார், ஆள்கிறார் )
நின்றிலர்--நில்லாதவர்கள் 
இருந்திலர்--இல்லாதவர்கள்
கிடந்திலர்--கிடவாதவர்கள்
திரிந்திலர்--திரியாதவர்கள்  ( இவை , அதாவது  நில்லா  , இல்லா , கிடவா , திரியா  தன்மை உள்ளவை , இறை சிந்தனையைக் குறிப்பவை (நிவ்ருத்தி ). அதாவது, வெளி உலக சுகத்தில் ஈடுபாடு  இல்லாதவர்கள் என்று பொருள் கொள்ளலாம். இவற்றிலும்  பெருமான் வசிக்கிறார் , ஆள்கிறார். )
என்றும்--எப்போதும்
ஓரியல்வினர்--ஒரே  இயல்போடு (தன்மையோடு) இருப்பவர்
எனநினைவரியவர்--என்று  நினைக்க  இயலாதவர் அப்பெருமான்
என்றும்--எப்போதும்
ஓரியல்வோடு  நின்ற--ஒரே  விதமான இயற்கையோடு கூடியவராய்
எம் திடரே--திடமான   பிரமாணத்தினால் சித்தரான நம்முடையவர்


====***====
The Supreme Lord, enshrined in the shining shruti (scriptures - Vedas) is the Material cause of the basic elements of 'aakaashaa' (ether), fire, air, water and earth, which combined to usher in the worlds, with a vast variety of colours and forms; He pervades them all, in and out, like unto the soul inside the body and remains invisible; He contains them all inside His stomach (during the period of deluge - pralaya)


திடம்--உறுதியான
விசும்பு--ஆகாசமென்ன
எரி--அக்னியென்ன
வளி--வாயுவென்ன
நீர்--நீரென்ன
நிலம்--பூமியென்ன
இவைமிசை--இவற்றை  ஆதாரமாகக் கொண்டு
படர் பொருள்--எங்கும் படர்ந்துள்ள பொருள்கள்
முழுவதும் ஆய்--அனைத்தையும் உருவாக்கி அவற்றுள் இருப்பவன்
அவை அவை தொறும்--அந்தந்த பதார்த்தங்கள் எல்லாவற்றிலும்
உடல் மிசை உயிர் என--உடலில்  ஆத்மா வியாபிப்பது போல
கரந்து--மறைந்து
எங்கும் பரந்து--எவ்விடத்திலும் (உள்ளேயும் , வெளியேயும் ) வியாபித்து
சுடர் மிகு சுருதியுள் உளன்--ஒளி பொலிந்த வேதத்தில் உள்ளவனான  எம்பெருமான்
இவை  உண்ட  சுரன்--பிரளய  காலத்தில்  இவை அனைத்தையும்  தன்னுள்ளே  (தனது  திருவயிற்றிலே) வைத்துக் கொள்ளும்  தேவனாவான்.

====***====

 The Supreme Lord is beyond the comprehension of even Brahma and other Surars (Devas); He is the material cause of the primordial matter, the other elements and all that exist, and safeguards them all inside His Stomach during the period of deluge; He is the one who (functioning through Siva) destroyed the three unique flying citadels. He is the propagator of knowledge to the Amarars (Devas) through Brahma; He creates the worlds and dissolves them through Ayan (Brahma) and Aran (Shiva) standing within them (as their Inner Self).

சுரர் அறிவு அரு நிலை--(பிரமன் முதலிய ) தேவர்களுக்கும் அறிய வொண்ணாத நிலைமை உடைத்தான
விண் முதல் முழுவதும்--மூலப் ப்ரக்ருதி முதலாக உள்ள    (இந்த அண்டம், அண்டத்தில்  உள்ள அனைத்தும் உருவானது முதல் தொடங்கி - இப்போது  வரை  ) அனைத்து வஸ்துக்களுக்கும்
வரன்  முதல்  ஆய்--சிறந்த காரண கர்த்தாவாய்  (அவற்றை எல்லாம் படைத்தவனாகவும்)
அவை முழுது உண்ட--அவற்றை எல்லாம்  (பிரளய காலத்தில் ) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயும் உள்ள
பரபரன்--பரம புருஷன்
அரன் என--சிவ பெருமானின்  உருவத்தைத்   தரித்தவனாகி
ஒரு மூன்று புரம் எரித்து--இணை இல்லாத  திரிபுரங்களை  எரித்தும்
உலகு  அழித்து--உலகங்களை  அழித்தல்  செய்தும்
அயன்--நான்முகக்  கடவுள்  என்னும் படியாக  நின்று
அமரர்க்கு  அறிவு இயந்து--தேவர்களுக்கு  ஞானத்தைக்  கொடுத்தும்
உலகு அமைத்து--உலகங்களை  படைத்தல் செய்தும்
உளன்--அவர்களுக்குள்ளே  ஆத்மாவாய் இருக்கும்  அவன்

 ====***====


Be it said (as the theists say), "He is", or (as the atheists say) "He is not", (both ways) His existence is established. He exists, at all times and in all places together with the aggregate of the formless sentient beings and the non-sentient things with shape and size, both in the gross state (embodied and therefore visible) and in the subtle state (disembodied and therefore objectively imperceptible).

உளன்  எனில்--இறைவன்  உண்டென்று  சொன்னாலும்
உளன் அலன் எனில்--இறைவன்  இல்லை  என்று  சொன்னாலும்
உளன்--அவன்  உள்ளதாகவே  தேறும் (முடிவாகும்)
உளன்  என  இலன் என--உளன் என்றும் , இலன் என்றும் சொல்லப்படுகிற
இவைகுணமுடைமையின்--இவை இரண்டையும் தனது  தன்மைகளாகக் கொண்டுள்ளமையால்
இவ்வுருவுகள்--இவை இரண்டையும் தனது  தன்மைகளாகக் கொண்டுள்ளமையால்
இவ்வருவுகள்--உருவம் இல்லாதவனாயும்
அவன் உருவம்--அப்பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும்
அவன் அருவம்--சூக்ஷ்ம சரீரங்களும்
இரு தகைமையொடு--இரண்டு தன்மைகளோடும்
ஒழிவிலன் பரந்து உளன்--எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் உள்ளவனாகவே  சித்திப்பவன்

(சிறு விளக்கம் திவ்யார்த்த தீபிகையிலிருந்து :  சர்வமும் சூனியம் (இறைவன்  இல்லை) என்கிற வாதத்தில் இறைவனுடைய சூனியத்வமும் அடங்கி உள்ளதால் , இறைவன் உள்ளான் என்றே ஸ்தாபிக்கப்  படுகிறது )

====***====


The Lord pervades every little bit of the oceanic waters, cool and sprawling (and yet does not feel cramped but on the other hand), He feels as easy there as in the expansive world outside. Either on earth or the upper regions (in the whole universe) there is no place where He is not immanent, dwelling, as He does secretly,  in the heart of all things and being however small or minute,and in all places (imperceptible to the things and beings pervaded by Him ever firm and eternal). He is the Lord, who contains them all within Himself, during the period of deluge (in the state of dissolution).

பரந்த--எங்கும் வியாபித்த
தண் பரவையுள்--குளிர்ந்த கடலினுள்
நீர்தொறும்--நீரின் பரமாணு தோறும் (ஒவ்வொரு அணுவிலும் )
பரந்த அண்டம் அது இது என  பரந்து உளன்--விஸ்தாரமான இந்த அண்டத்தில் எங்கும் வியாபித்துள்ளான்
நிலம்--பூமியிலும்
விசும்பு--ஆகாயத்திலும்
ஒழிவு அற--இடைவெளியற்று
கரந்த சில் இடந் தொறும்--சூட்சுமமான அற்பமான இடங்கள் தோறும்
இடம் திகழ் பொருள் தொறும்--அந்த இடங்களிலே உள்ள  ஆத்ம வஸ்துக்கள்
கரந்து--அவைகளுக்குள் மறைந்து
எங்கும் பரந்து உளன்--எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளான்
இவை உண்ட கரன்--இவை அனைத்தையும் பிரளய காலத்தில் தனக்குள்ளே அடக்கமாகக் கொண்டவன் - எம்பெருமான் - ஸ்ரீமன் நாராயணன்

====***====


The above ten poems (paasuram), out of the thousand, rich alike in sound and substance (matter and manner of expression), sung by Sadagopan of Kurugur in adoration of the Glorious Feet of the Supreme Lord, the great Contriver and Controller of the five elements , the spatial ether , fire, air, water and earth with their respective basic qualities of sound, heat, force, chillness and endurance, shall lead the people who chant his Name to Heaven (Moksha). 

கரம்--திடமான
விசும்பு--ஆகாயமென்ன
எரி--அக்னியென்ன
வளி--வாயு(காற்று ) வென்ன
நீர் --நீரென்ன
நிலம் --பூமியென்ன (ஆகிய)
இவை மிசை--இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாய் உள்ள)
வரன் --சிறந்த
நவில் --சப்தம் (ஆகாய குணம்)
திறல்--கொளுத்தும் சக்தி என்ன (அக்னி குணம்)
வலி--எதையும் தூக்க வல்ல பலமென்ன (காற்றின் குணம்)
அளி--குளிர்ச்சியென்ன (நீரின் குணம்)
பொறை--எதையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய (தாங்கிக் கொள்கிற) தன்மையென்ன (நிலத்தின் குணம்)
ஆய் என்ன--ஆகிய இந்த குணங்கள் அனைத்தையும் தன் வசமாய் இருக்கப் பெற்ற
பரன்--எம்பெருமானுடைய
அடி மேல்--திருவடி விஷயமாக
குருகூர்  சடகோபன் சொல்--திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
நிரல் நிறை--சப்தங்களும் அர்த்தங்களும் பூரணமாய்க் கொண்ட
ஆயிரத்து--ஆயிரம் பாசுரங்களிலே
இவை பத்தும்--இப்பத்துப் பாசுரமும்
வீடே--எம்பெருமானின் திருவடிகளின் மேல் விடப்பட்டன (ஸமர்ப்பிக்கப்பட்டன)

====***End of First decad***====




Saturday, April 12, 2014

First Centum - Second Decad

||ஓம் நமோ நாராயணாய ||

First Centum - Second Decad

The following poems in this decad are about the problems facing humans in realizing God.Sri Nammazhwar finds the world steeped in the pleasures of worldly life and humans ignorant of the glory that awaits them if they realize God. He stresses on the need to disengage from the "I" and "Mine" and dedicate ourselves to the limitless wealth and splendour of the Supreme Lord and reap the rich harvest of eternal Bliss and Beatitude. He also teaches true renunciation.

====***====

Give up completely (all that resists against abiding oneself in God). After giving up , surrender yourself to the Custodian of Heaven.

முற்றவும்
--
முழுவதையும்  (  அஹங்காரம் (ego) , மமகாரம் (self importance) , இவை அனைத்தையும் முழுவதுமாக)
வீடுமின்
--
விட்டு விடுங்கள்
வீடு செய்து
--
அப்படி விட்டு
உம்  உயிர்
--
உமது ஆத்மாவை 
வீடு  உடையான்  இடை
--
மோக்ஷ நிர்வாஹனான ஸ்வாமியிடத்திலே
வீடு செய்யுமின்
--
ஸமர்ப்பியுங்கள்


====***====



You will do well to pause for a while and discover for yourselves,  that the bodies the souls get into (and look upon as the medium for enjoyment of sensual pleasures), last no more than the lightning (very fleeting). 



உயிர் மன்னு
ஆத்மாவைக் கொண்டு  வாழ்கின்ற
ஆக்கைகள்                  
சரீரங்கள் 
மின்னின்                       
மின்னலைக் காட்டிலும்
நிலையில
நிலையுடையனவல்ல
என்னுமிடத்து
என்று சொல்லுமளவில்
நீரே
நீங்களே 
இறை
சிறிது 
உன்னுமின்
ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள் 

(திவ்யார்த்த  தீபிகை  இன்னொரு விளக்கம் :
இச்சரீரம் வாழும் காலம்  மிகச் சிறியதாகையால் ,

இறை                            --     எம்பெருமானின்
உன்னுமின்                --      நாமத்தை  மனனம் செய்யுங்கள் )

 ====***====


If you can cut out, root and branch, all sense of "You" and "Yours"  and join the Lord; there is nothing as good as that for the Souls.
                                                       
நீர்  நுமது  என்ற  இவை
அஹங்கார  மமகாரங்களாகிற இவற்றை
வேர்  முதல்  மாய்த்துவேரோடு முழுவதுமாய்  அறுத்து  (நமது  ஆசைகளை )
இறை எம்பெருமானை
சேர்மின் அடையுங்கள் 
உயிர்க்கு ஆத்மாவிற்கு 
அதன்  நேர்  நிறை இல் அதனை  ஒத்த நிறைவு செய்யக் கூடிய ஒன்றும் இல்லை  
====***====

 Renouncing all else, seek Him who is limitless Bliss, very different from the non-existent (fleeting and ever changing) pleasures of material things
                                                       
அவன் உரு
அந்த எம்பெருமானுடைய ஸ்வரூபமானது
இல்லதும் அல்லது
அழியக் கூடிய  தன்மையுடையதும்  இல்லாமல்    ( நமது சரீரம் )
உள்ளதும்  அல்லது
அழியாத் தன்மையுடையதும்  இல்லாமல்    ( நமது  ஆத்மா )
எல்லை  இல் 
எல்லையில்லாத 
அந்நலம் 
அப்படிப்பட்ட   ஆனந்த ஸ்வரூபியாயிருக்கும் 
பற்று  அற்று புல்கு 
வேறு விஷயங்களில்  ஆசை  வைக்காமல்   அந்தப்  பெருமானே தஞ்சம்  என்றடைக.  


====***====

Freed from worldly attachments, the Soul attains emancipation;   However, shun that too (which is a menacing state of self-enjoyment known as Kaivalya Moksha) and seek firmly the Lord, with exclusive devotion unto Him.


பற்று  அற்றது  எனில் 
உலக  விஷயங்களில்  பற்று  ஒழிந்த  மாத்திரத்திலே
உயிர்ஆத்மா 
வீடு உற்றது  மோக்ஷத்தை (கைவல்ய  மோக்ஷம் ) பெற்றான்  ஆவான் 
அது அந்தக்  கைவல்ய  மோக்ஷத்தை 
செற்று         வெறுத்து 
மன்ன  உறில் நிலை நிற்கும்படி பகவத்  விஷயத்தை கிட்டப்  பார்க்கில் 
அற்று  (எம்பெருமானை ஆஷ்ரயிக்கும் போதே )  அற்றுத்   (கைவல்ய  மோக்ஷத்தின் மீதுண்டான இச்சை )   தீர்ந்து 
இறை  அந்த  எம்பெருமானை  
பற்று  பற்றுக 


====***====


Isan (The Supreme Lord), being solely attached to His devotees,  He is All-in-One (everything) unto them. And so, (the devotees) hold on to Him and get absorbed in serving Him exclusively.


ஈசனும்   
ஸ்ரீ வைகுண்ட நிலையனான எம்பெருமானும்
பற்றிலன்
அங்குள்ள நித்யமுக்தர்களிடத்தும்  பற்று  இல்லாதவனாய்
முற்றவும்  நின்றனன் 
இவ்வுலகில்  ஆஸ்ரயிக்கின்ற  சம்சாரிகளிடத்திலேயே  காதல் கொண்டவனாய்  இருக்கின்றான்
பற்றிலை  ஆய்                          
ஹேய  விஷயங்களிலே  நீ  வைத்திருக்கிற  பற்றை விட்டவனாகி 
அவன் முற்றில் அடங்கு  
அவனையே  எல்லாமாகப்  பற்றுவாயாக.


====***==== 

 Realise that all this exceedingly enchanting cosmic wealth is that of Isan. (Realize that you are part of this possession of the Lord and thus rightfully entitled to approach Him , in love ). Blend yourself into it with this thought.

அடங்க எழில்
--
முற்றிலும்   அழகியதான
சம்பத்து  அடங்க
--
(எம்பெருமானுடைய ) விபூதியை யெல்லாம்
கண்டு                          
--பார்த்து 
அடங்க --அதெல்லாம் 
ஈசன்   அஃது
--
எம்பெருமானுடையதான
எழில்  என்று
--
சம்பத்து (செல்வம்) என்று   துணிந்து 
உள்ளே 
--
அந்த  பகவத்   விபூதிக்குள்ளேயே 
அடங்குக                    
--
இணைந்து  விடுவது 


====***====

With the true awareness that the triple faculties of mental apprehension, speech and bodily actions,  are meant to be solely dedicated to Irai (the Lord), place them at His exclusive service and disengage from their erstwhile misplaced attachments and inhibitions.


உள்ளம் உரை 
--
மனது  என்றும்  வாக்கு  என்றும் 
செயல் 
--
உடல் என்றும் 
உள்ள       
--
ஏற்கனவேயுள்ள
இம்மூன்றையும் 
--
இந்த மூன்று  உறுப்புகளையும்   
உள்ளி  --
ஆராய்ந்து பார்த்து    
கெடுத்து
--
அவற்றிற்குள்ள   விஷயாந்தரப்  பற்றைத்  தவிர்த்து
இறை உள்ளில்
--
இறைவனிடத்தில்   
ஒடுங்கு                    
--
ஒடுங்குக  (concentrate)



====***====


Once you realize your true relationship with God, He as the proprietor and you as His property, dedicate yourself to Him. All your sins will cease and await then, the day when your physical body falls off.



அவன் கண்  
--
அந்தப்  பெருமானிடத்திலே 
ஒடுங்க 
--
லயித்திருந்தால் 
எல்லாம்  ஒடுங்கலும்       
--
மனத்தை  இறைவனல்லாது  வேறு  விஷயங்களில்  லயிக்க  வைக்கும்  வாசனைகள்  எல்லாம் 
விடும் 
--
விட்டு  நீங்கும்   
பின்னும்  
--
அதற்குப்  பிறகும்    
ஆக்கை விடும்  பொழுது
--
சரீரம்  தொலையும்  நாளை
எண் 
--
எதிர் பார்த்திரு 


====***====

Seek the mighty feet of Naranan, who is, at once, the abode of countless souls of vast excellence and an inexhaustible fountain of Bliss, the repository of innumerable auspicious attributes.



எண்  பெருக்கு 
--
எண்ணிக்கை  பெருகிக்  கொண்டே  இருக்கும்படி  அளவு இல்லாத 
அந்நலத்து 
--
ஞானம்  முதலிய  குணங்களை உடைய 
ஒண் பொருள்       
--
சிறந்த  பொருளாகிய  ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு  இல 
--
முடிவில்லாத   
வண் புகழ்
--
திருக்கல்யாண குணங்களை  யுடையனான    
நாரணன்
--
ஸ்ரீமன்  நாராயணனுடைய
திண் கழல்
--
அடியார்களை   ஒரு நாளும் கை  விடாத  திருவடிகளை   
சேர்                    
--
வணங்கித் தஞ்சமடைக.



====***====


These ten poems (paasurams) out of the thousand, sung in accurate metrical composition, by Sadagopan of Thirunagari with lovely ponds , convey his well thought out message for the upliftment and emancipation of men and women.



சேர்  தடம்  
--
செறிந்த   தடாகங்களை யுடைய 
தென்  குருகூர் 
--
திருநகரியில்  அவதரித்த 
சடகோபன்  சொல்       
--
நம்மாழ்வார்   அருளிச்  செய்த 
சீர்  தொடை
--
நல்ல  பாடல்  அமைப்பு  வாய்ந்த   
ஆயிரத்து  
--
ஆயிரத்தின்  உள்ளே    
இப்பத்து  
--
இந்தப் பத்துப்  பாசுரங்கள்
ஓர்த்த 
--
ஆராய்ந்து    சொல்லப் பட்டது 

====***End of Second decad***====