Saturday, April 12, 2014

First Centum - Second Decad

||ஓம் நமோ நாராயணாய ||

First Centum - Second Decad

The following poems in this decad are about the problems facing humans in realizing God.Sri Nammazhwar finds the world steeped in the pleasures of worldly life and humans ignorant of the glory that awaits them if they realize God. He stresses on the need to disengage from the "I" and "Mine" and dedicate ourselves to the limitless wealth and splendour of the Supreme Lord and reap the rich harvest of eternal Bliss and Beatitude. He also teaches true renunciation.

====***====

Give up completely (all that resists against abiding oneself in God). After giving up , surrender yourself to the Custodian of Heaven.

முற்றவும்
--
முழுவதையும்  (  அஹங்காரம் (ego) , மமகாரம் (self importance) , இவை அனைத்தையும் முழுவதுமாக)
வீடுமின்
--
விட்டு விடுங்கள்
வீடு செய்து
--
அப்படி விட்டு
உம்  உயிர்
--
உமது ஆத்மாவை 
வீடு  உடையான்  இடை
--
மோக்ஷ நிர்வாஹனான ஸ்வாமியிடத்திலே
வீடு செய்யுமின்
--
ஸமர்ப்பியுங்கள்


====***====



You will do well to pause for a while and discover for yourselves,  that the bodies the souls get into (and look upon as the medium for enjoyment of sensual pleasures), last no more than the lightning (very fleeting). 



உயிர் மன்னு
ஆத்மாவைக் கொண்டு  வாழ்கின்ற
ஆக்கைகள்                  
சரீரங்கள் 
மின்னின்                       
மின்னலைக் காட்டிலும்
நிலையில
நிலையுடையனவல்ல
என்னுமிடத்து
என்று சொல்லுமளவில்
நீரே
நீங்களே 
இறை
சிறிது 
உன்னுமின்
ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள் 

(திவ்யார்த்த  தீபிகை  இன்னொரு விளக்கம் :
இச்சரீரம் வாழும் காலம்  மிகச் சிறியதாகையால் ,

இறை                            --     எம்பெருமானின்
உன்னுமின்                --      நாமத்தை  மனனம் செய்யுங்கள் )

 ====***====


If you can cut out, root and branch, all sense of "You" and "Yours"  and join the Lord; there is nothing as good as that for the Souls.
                                                       
நீர்  நுமது  என்ற  இவை
அஹங்கார  மமகாரங்களாகிற இவற்றை
வேர்  முதல்  மாய்த்துவேரோடு முழுவதுமாய்  அறுத்து  (நமது  ஆசைகளை )
இறை எம்பெருமானை
சேர்மின் அடையுங்கள் 
உயிர்க்கு ஆத்மாவிற்கு 
அதன்  நேர்  நிறை இல் அதனை  ஒத்த நிறைவு செய்யக் கூடிய ஒன்றும் இல்லை  
====***====

 Renouncing all else, seek Him who is limitless Bliss, very different from the non-existent (fleeting and ever changing) pleasures of material things
                                                       
அவன் உரு
அந்த எம்பெருமானுடைய ஸ்வரூபமானது
இல்லதும் அல்லது
அழியக் கூடிய  தன்மையுடையதும்  இல்லாமல்    ( நமது சரீரம் )
உள்ளதும்  அல்லது
அழியாத் தன்மையுடையதும்  இல்லாமல்    ( நமது  ஆத்மா )
எல்லை  இல் 
எல்லையில்லாத 
அந்நலம் 
அப்படிப்பட்ட   ஆனந்த ஸ்வரூபியாயிருக்கும் 
பற்று  அற்று புல்கு 
வேறு விஷயங்களில்  ஆசை  வைக்காமல்   அந்தப்  பெருமானே தஞ்சம்  என்றடைக.  


====***====

Freed from worldly attachments, the Soul attains emancipation;   However, shun that too (which is a menacing state of self-enjoyment known as Kaivalya Moksha) and seek firmly the Lord, with exclusive devotion unto Him.


பற்று  அற்றது  எனில் 
உலக  விஷயங்களில்  பற்று  ஒழிந்த  மாத்திரத்திலே
உயிர்ஆத்மா 
வீடு உற்றது  மோக்ஷத்தை (கைவல்ய  மோக்ஷம் ) பெற்றான்  ஆவான் 
அது அந்தக்  கைவல்ய  மோக்ஷத்தை 
செற்று         வெறுத்து 
மன்ன  உறில் நிலை நிற்கும்படி பகவத்  விஷயத்தை கிட்டப்  பார்க்கில் 
அற்று  (எம்பெருமானை ஆஷ்ரயிக்கும் போதே )  அற்றுத்   (கைவல்ய  மோக்ஷத்தின் மீதுண்டான இச்சை )   தீர்ந்து 
இறை  அந்த  எம்பெருமானை  
பற்று  பற்றுக 


====***====


Isan (The Supreme Lord), being solely attached to His devotees,  He is All-in-One (everything) unto them. And so, (the devotees) hold on to Him and get absorbed in serving Him exclusively.


ஈசனும்   
ஸ்ரீ வைகுண்ட நிலையனான எம்பெருமானும்
பற்றிலன்
அங்குள்ள நித்யமுக்தர்களிடத்தும்  பற்று  இல்லாதவனாய்
முற்றவும்  நின்றனன் 
இவ்வுலகில்  ஆஸ்ரயிக்கின்ற  சம்சாரிகளிடத்திலேயே  காதல் கொண்டவனாய்  இருக்கின்றான்
பற்றிலை  ஆய்                          
ஹேய  விஷயங்களிலே  நீ  வைத்திருக்கிற  பற்றை விட்டவனாகி 
அவன் முற்றில் அடங்கு  
அவனையே  எல்லாமாகப்  பற்றுவாயாக.


====***==== 

 Realise that all this exceedingly enchanting cosmic wealth is that of Isan. (Realize that you are part of this possession of the Lord and thus rightfully entitled to approach Him , in love ). Blend yourself into it with this thought.

அடங்க எழில்
--
முற்றிலும்   அழகியதான
சம்பத்து  அடங்க
--
(எம்பெருமானுடைய ) விபூதியை யெல்லாம்
கண்டு                          
--பார்த்து 
அடங்க --அதெல்லாம் 
ஈசன்   அஃது
--
எம்பெருமானுடையதான
எழில்  என்று
--
சம்பத்து (செல்வம்) என்று   துணிந்து 
உள்ளே 
--
அந்த  பகவத்   விபூதிக்குள்ளேயே 
அடங்குக                    
--
இணைந்து  விடுவது 


====***====

With the true awareness that the triple faculties of mental apprehension, speech and bodily actions,  are meant to be solely dedicated to Irai (the Lord), place them at His exclusive service and disengage from their erstwhile misplaced attachments and inhibitions.


உள்ளம் உரை 
--
மனது  என்றும்  வாக்கு  என்றும் 
செயல் 
--
உடல் என்றும் 
உள்ள       
--
ஏற்கனவேயுள்ள
இம்மூன்றையும் 
--
இந்த மூன்று  உறுப்புகளையும்   
உள்ளி  --
ஆராய்ந்து பார்த்து    
கெடுத்து
--
அவற்றிற்குள்ள   விஷயாந்தரப்  பற்றைத்  தவிர்த்து
இறை உள்ளில்
--
இறைவனிடத்தில்   
ஒடுங்கு                    
--
ஒடுங்குக  (concentrate)



====***====


Once you realize your true relationship with God, He as the proprietor and you as His property, dedicate yourself to Him. All your sins will cease and await then, the day when your physical body falls off.



அவன் கண்  
--
அந்தப்  பெருமானிடத்திலே 
ஒடுங்க 
--
லயித்திருந்தால் 
எல்லாம்  ஒடுங்கலும்       
--
மனத்தை  இறைவனல்லாது  வேறு  விஷயங்களில்  லயிக்க  வைக்கும்  வாசனைகள்  எல்லாம் 
விடும் 
--
விட்டு  நீங்கும்   
பின்னும்  
--
அதற்குப்  பிறகும்    
ஆக்கை விடும்  பொழுது
--
சரீரம்  தொலையும்  நாளை
எண் 
--
எதிர் பார்த்திரு 


====***====

Seek the mighty feet of Naranan, who is, at once, the abode of countless souls of vast excellence and an inexhaustible fountain of Bliss, the repository of innumerable auspicious attributes.



எண்  பெருக்கு 
--
எண்ணிக்கை  பெருகிக்  கொண்டே  இருக்கும்படி  அளவு இல்லாத 
அந்நலத்து 
--
ஞானம்  முதலிய  குணங்களை உடைய 
ஒண் பொருள்       
--
சிறந்த  பொருளாகிய  ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு  இல 
--
முடிவில்லாத   
வண் புகழ்
--
திருக்கல்யாண குணங்களை  யுடையனான    
நாரணன்
--
ஸ்ரீமன்  நாராயணனுடைய
திண் கழல்
--
அடியார்களை   ஒரு நாளும் கை  விடாத  திருவடிகளை   
சேர்                    
--
வணங்கித் தஞ்சமடைக.



====***====


These ten poems (paasurams) out of the thousand, sung in accurate metrical composition, by Sadagopan of Thirunagari with lovely ponds , convey his well thought out message for the upliftment and emancipation of men and women.



சேர்  தடம்  
--
செறிந்த   தடாகங்களை யுடைய 
தென்  குருகூர் 
--
திருநகரியில்  அவதரித்த 
சடகோபன்  சொல்       
--
நம்மாழ்வார்   அருளிச்  செய்த 
சீர்  தொடை
--
நல்ல  பாடல்  அமைப்பு  வாய்ந்த   
ஆயிரத்து  
--
ஆயிரத்தின்  உள்ளே    
இப்பத்து  
--
இந்தப் பத்துப்  பாசுரங்கள்
ஓர்த்த 
--
ஆராய்ந்து    சொல்லப் பட்டது 

====***End of Second decad***====

No comments:

Post a Comment