Monday, March 17, 2014

First Centum - Third decad


||Om Namo Narayanaya|| 
 

Sri Nammazhwar's Thiruvaimozhi

First Centum - Third decad

In the first decad the Alwar spoke about the Super eminent  Glory of God. In the second decad he exhorts humans to turn their minds to God and get absorbed in His contemplation. To remove the apprehensions of the humans of their ability to realize Him, Alwar explains in the third decad the Lord's Simplicity and how He makes Himself accessible (His Saulabhyam).

====***====


To those who turn their minds to Him in utter devotion, He is easily accessible. But He is the Mystic, difficult to attain for others. Eagerly sought by Malarmagal (Sri Mahalakshmi, who took her abode in the broad and winsome chest of the Lord), He is a marvel Who is difficult to attain, was reduced to the position of a weeping child, fastened by the chest to a pounder (by Yasodha), for stealing butter from the churning-rod (Mathu).


பத்து  உடை 
--
பக்தி  உடைய
அடியவர்க்கு--அடியார்களுக்கு
எளியவன்  --எளிமையானவன்
பிறர்களுக்கு--மற்றையோர்க்கு
அரிய--கிடைத்தற்கு  அரியவனாகவும்  உள்ள
வித்தகன்--ஆச்சர்ய  பூதனும் 
மலர் மகள் விரும்பும்--பெரிய  பிராட்டியார்  விரும்புவதற்கு  ஈடானவனும் 
பெறல் அரு--பெறுதற்கு   அரியனுமான 
நம்  அடிகள்--நமது  ஸ்வாமி 
மத்து  உறு  கடை வெண்ணெய் களவினில்--மத்தைக் கொண்டு  கடைகின்ற வெண்ணெய் களவில் 
உரம் இடை--மார்பினில் 
ஆப்புண்டு--கட்டுண்டு 
உரலினோடு--உரலோடு 
இணைந்திருந்து--பொருந்தியிருந்து 
ஏங்கிய--ஏங்கியிருந்த 
எளிவு--எளிமைக் குணம் 
எத்திறம்--எப்படிப்பட்டது !

====***====

As per tradition, it is said that Sri Madhurakavi and other devotees, who had the great fortune of listening to "Thiruvaimozhi" from the sacred lips of Alwar, gathered around him, who was lost in deep meditation for six months!  He then came out of that state and started from where he left off. 

Translation:

The Lord is the very personification of Simplicity (Saulabyam), which helps his innumerous auspicious qualities, without beginning or end, shine forth; having made innumerable descents without restrictions in manner of birth and place of descent, it is always the Lord's prerogative to grant that cleansed and clarified state (known as Moksha). Shedding with sweet spontaniety, His unlimited Grace to his devotees, He is beyond the reach of others.




நிலை  வரம்பு  இல 
--
ஒரு நிலையும் , நியதியும் இல்லாத
பல பிறப்பாய் 
--
பல வகைப் பட்ட பிறப்புக்களை உடையனாய்
முதல் இல கேடு இல 
--
முதலும் இல்லாமல் முடிவுமில்லாமல் இருக்கின்ற
முழு நலம் 
--
கல்யாண குணங்கள்  எல்லாம்
ஒளி  வரும் 
--
ஒளியோடு கூடிய
எளி வரும் இயல்வினன் 
--
எளிமையே  இயல்பாக உடையவனாய்
வீடு ஆம் தெளி தரு 
--
மோக்ஷமாகிற  தெளிவைத் தருதலாகிற
நிலைமை அது முழுவதும் 
--
அந்த நிலைமையை முழுவதும்
ஒழிவு இலன் 
--
எப்போதும் உடையவனாய்
இறையோன்
--
ஸ்வாமியானவன்
அளி  வரும் அருளினோடு   அமைந்து
--
கனிவோடு கூடிய அருளுடன்
அகத்தனன் 
--
அடியவர்க்கு  அந்தரங்கனாய்
புறத்தனன்      
--
மற்றையோர்க்கு   அணுகத்  தகாதவனாயும் இருப்பன்                    
               
====***====
 
 He is the appropriate abode of all sentient being including the Amaras, (the exalted Brahma and others) who are of outstanding eminence by virtue of their moral attainments of a high degree and mental perfection, as well as the non-sentient things. Can these beings comprehend the wonderful secrets of the descents (Avataras) of Lord Naranan ?

அமைவு உடை--நன்கு அமைந்த
அறம் நெறி முழுவதும்--தரும மார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து--இதற்கு மேலும் உயர்த்தி இல்லை என்கிறபடியாக மிகவும் உயர்ந்தவர்களாகி
அமைவு உடை--ஆச்சரியப் படத்தகுந்த அமைதியை உடைய
முதல்--ஸ்ருஷ்டியென்ன
கெடல்--சம்ஹாரமென்ன
இடை ஒடிவு--அவாந்தர சம்ஹாரமென்ன (ஆகிய இவை)
அற--மிகவும்
நிலம் அது ஆம்--கை வந்திருக்கும்
அமைவு உடை--பூர்த்தியை உடைய
அமரரும்--பிரமன் முதலிய தேவர்களும்
யாவையும் --எல்லா சேதனப் பொருள்களும் (புலன்களால் உணரப்படுகிற பொருள்களனைத்தும்)
யாவரும் --எல்லா அசேதனப் பொருள்களும் (புலன்களால் உணரப்படாததாகிற பொருள்களனைத்தும்)
தான் ஆம்--தான் என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படியான
அமைவு உடை--பொருத்தம் (அமைப்பு)கொண்டுள்ள
நாரணன் --எம்பெருமானுடைய
மாயையை --ரஹசியங்களை
யாரே அறிபவர்--யார் தாம் அறிய வல்லார் (யாரும் இல்லை)

====***====


Our Lord, bearing a thousand (innumerable) names and forms (appropriate thereto) can be comprehended, as such, (by the devotees, however meagre, their intellect and poor their parentage); on the other hand the ungodly who bear no love for Him cannot comprehend His names and forms (however exalted be their knowledge and parentage); So, there is a perennial debate (between the two sets of people) one group affirming that the Lord goes by several names and forms and the other group asserting that He has none of these.

பேரும் --(விக்ரஹத்தை பற்றிய ) திருநாமங்களும் 
பிற --(அந்தத் திருநாமங்களுக்கேற்ற ) விக்ரஹங்களும் 
பல ஆயிரம் உடைய --அநேகம் ஆயிரம் உடையவனாய் தோற்றி 
எம்  பெருமான் --எமக்கு நாதன் ஆனவனாய் 
யாரும் --எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் 
ஓர் நிலைமையன் என அறிவு
அரிய எம்பெருமான் 
--ஒரு படியை உடையவன்  என்று அறுதியிட ஒண்ணாத பெருமானாய் 
யாரும் --(அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களுக்கும்  
ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் --ஒர்படிப்பட்டவன் என்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு 
ஓர்  பேரும் --ஒரு பேரும் 
ஓர் உருவமும் --ஒரு ரூபமும் 
உளது இல்லை --உண்டாயிருப்பதில்லை என்றும்  (அன்பிலாதாரும் )
இலது இல்லை --பேரும் ரூபமும் இல்லாமல் இல்லை என்று அன்புடையாரும் (ஏனெனில் பகவான் இவர்களுக்கு ரூபத்துடன் காட்சி தந்தமையால்)
பிணக்கே --விவாதித்துக் கொண்டே இருப்பர்


====***====



The eternal Lord, who posesses the Six principal attributes of Knowledge, strength, sovereignity, valor, power and splendour gave Gita (the Celestial song), which encompasses and replaces the teachings of the six philosophical doctrines (Sankhya, Yoga, Bouddha, Jaina, Kanaata and Pasupada). Imbibe the teachings of Gita, stick to the path of loving surrender to His Sweet Grace, while excluding the other paths and through non-indulgence of bodily pleasures.

அறு வகை சமயமும் பிணக்கு அற --ஆறு வகைப்பட்ட சமயங்களும் (வேதங்களின் வழியோடு) பிணக்கம் ஒழியும்படி 
நெறி --வேத மார்க்கத்தை 
உள்ளி --ஆராய்ந்து 
உரைத்த --அருளிச் செய்த 
கணக்கு அறு நலத்தனன் --எண்ணிறந்த கல்யாண குணங்களை உடையவனும் 
அந்தம் இல் ஆதி --முடிவில்லாத முதல்வனும் 
அம் பகவன் --அழகாகிய ஞானம் முதலிய ஆறு குணங்களை உடைய எம்பெருமானது 
வணக்கு உடை --வணக்கத்தை உடைய 
தவம் நெறி --பக்தி அல்லது ப்ரபத்தி ஆகிற 
வழி நின்று --மார்க்கத்தில் நின்று 
புறம் நெறி --வேறு மார்க்கங்களாகிற 
களை --களையை 
கட்டு --பறித்து 
அவனுடைய உணர்வு கொண்டு --அவன் அளித்த கீதையைக் கொண்டு 
உணர்ந்து --உணர்ச்சி பெற்று 
பசை அற --வாஸனா ரூபமான பற்று அறும் படி 
உணக்குமின் --ஆசைகளைப்  போக்கி விடுங்கள் 
====***====


For the Jivatma (Soul), it is possible to know its own inherent nature and quality through a rigorous process of enquiry, intuition and contemplation. But a similar perception  of Divine Nature (Irainilai) by the soul is hardly possible. Only one thing impressed my Soul, after intense study of the traits of Ari (Narayana), Ayan (Brahma) and Aran (Shiva), that Narayana is the Supreme Lord.

உணர்ந்து உணர்ந்து --உணர்வையே இயற்கையாக உடையனாகி 
இழிந்து அகன்று உயர்ந்து --(அந்த  உணர்வு அகண்டமாகையாலே ) பத்துத் திக்கிலும் வியாபித்து 
உரு வியந்த --ஜடப் பொருளில் நின்றும் வேறு பட்டிருக்கின்ற 
இ  நிலைமை --இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை 
உணர்ந்து --கேள்வியாலே அறிந்து 
உணர்ந்து --மனனத்தினாலே அறிந்து 
உணரிலும் --யோகத்தாலே பிரத்யக்ஷமாக அறிந்தாலும் 
இறை நிலை  உணர்வு --சர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதானது 
அரிது --அருமையை (கிட்டாததாய் ) இருக்கிறது  (ஆயினும்)
அரி அயன் அரன் என்னும் இவரை --விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை 
உணர்ந்து உணர்ந்து --(ஒவ்வொருவருடைய குணங்களை ) பலவாலும் ஆராய்ந்து 
உரைத்து உரைத்து --(அதற்கு இணங்க) பிரமாணங்களை அலசிப் பார்த்து 
மனப்பட்டது ஒன்றே --உங்கள் மனத்தில் ஈஸ்வரனாகத் தோன்றின ஒரு பொருளை 
உணர்ந்து உணர்ந்து --பலகாலும் அனுசந்தித்து 
உரைத்து உரைத்து --அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றை  பலகாலும் சொல்லி
இறைஞ்சுமின் --உபாசியுங்கள் (ஜபம்  செய்யுங்கள் )
====***====

Naranan beaming through His auspicious attributes, firm and fine, Nanmukan (Brahma) and Aran, who look so much alike that it is difficult to comprehend whether they are one or many. Investigate and discern that there is but One God (that is Naranan, the Super-Soul residing in all, including Brahma and Rudra); With this discovery give up your allegiance to the other two and attach yourself firmly to Narayana (as the only one God) during your life time.

ஒன்று என --ஒன்றென்றும் 
பல என --பல என்றும் (ஒருவன் பிரதானம் என்றும் பலர் பிரதானர் என்றும்)
அறிவு அரு --அறிதற்கு அரிதான 
வடிவினுள் --உருவுக்குள்ளே 
நின்ற --நிலைத்திருக்கின்ற 
நன்று --விலக்ஷணமான 
எழில் --கல்யாண குணங்களாலே பிரகாசிக்கின்ற 
நாரணன் --ஸ்ரீ மன் நாராயணன் 
நான் முகன் --பிரமன் 
அரன் --ருத்ரன் 
என்னும் இவரை --என்னும் இத்தெய்வங்களை 
ஒன்ற --மத்யஸ்த த்ருஷ்டியாக 
நும் மனத்து  வைத்து --உங்களது நெஞ்சில் வைத்து 
உள்ளி --(அவர்களது ஸ்வரூப ஸ்வபாவங்களை பிரமாணங்  கொண்டு ) ஆராய்ந்து 
நும் --உங்களுக்குண்டான 
இரு பசை  அறுத்து --இருவர் திறத்திலாகும் ஈஸ்வர புத்தியை ஒழித்து 
அவனிடை --அந்த நன்றெழில் நாரணன் பக்கலிலே 
நம்முடை --நம்முடைய 
நாள் --வாழ் நாளில் 
நன்று என --நன்றாக 
நலம் செய்வது --பக்தி பண்ணுதற்கு  உரியது 
====***====


If we cleanse our minds of the notion of parity among the Tri-murthis, through that cleanser, which is wisdom and worship everyday at the felicitous feet of our Lord, the gracious consort of Thiru (Sri Mahalakshmi), all our past sins which had been tormenting us so far will die at once, and we will be free from wants of any kind. It will be good if we (bow down to him) at least in the last days of our life and Lord's grace will fall on us.

மனனகம் --மனதிலுண்டான 
மலம் அற --(மும்மூர்த்திகளும் சமம் என்கிற குழப்பம் ) என்கிற அழுக்கு ஒழியும்படி 
கழுவி --விவேகத்தாலே பரிசுத்தப் படுத்தி 
நாளும் --நாள் தோறும் (எப்போதும் ) 
நின்று அடும் --நம்மை  விடாது நின்று வருத்துகின்ற 
நம பழமை அம் கொடு --நாமறிந்தே நமக்கென்று தேடின பழமையாகிற மிகவும் கொடிய பாவங்கள் 
உடனே மாளும் --ஆச்ரயித்த உடனே தொலையும் 
ஓர் குறைவு இல்லை --ஒரு குறைவும் உண்டாகாது 
நம் --நமக்கென்றே உரிய 
திரு உடை அடிகள் தம் --திருமகளைக் கொண்ட ஸ்வாமியினுடைய 
நலம் கழல் --அழகிய திருவடிகளை 
வணங்கி --ஆச்ரயிக்க 
மாளும் ஓர் இடத்திலும் --(இப்படி ஆச்ரயிக்குமிடத்தில் ) சரீரத்தை விடுகிற காலத்திலும் 
வணக்கொடு --வணக்கத்தோடு 
மாள்வது --முடிவது 
வலம் --நன்று 
====***====


His (Lord Maha Vishnu's) navel is the seat of brahma, the creator of many lovely worlds. Rudra, the destroyer of the three citadels and demon chiefs,  propitiates the Lord and has found a place to the right, on His broad winsome chest. He also makes Himself visible to one and all, in the respective worlds. He keeps all the great qualities in His stomach, other than the ones disclosed to us already; these are his mysterious ways indeed.

எழு --பதினான்கு லோகங்களையும் நிர்வஹித்தற்கு உரிய எழுச்சியையுடைய 
திசை முகன் --பிரமன் 
படைத்த --உண்டாக்கிய 
நல் உலகமும் தானும் --நல்ல லோகங்களும் தானுமாக 
துந்தித் தலத்து இடம் பெற --திரு நாபியில் இடம் பெற்றிருக்க 
திரிபுரம் எரித்தவன் --முப்புரங்களை எரித்தவனாகிய ருத்ரன் 
வலத்தனன் --வலது பக்கத்திலிருப்பான் 
பின்னும் --மேலும் 
அவன் புலப்பட --அவன் கண்ணுக்கு இலக்காக 
தானே --தானே 
தன் உலகத்தில் --தன்னைதான லோகத்தில் 
அகத்தனன் --அவதரித்து உள்ளே இருப்பன் 
சொலப்  புகில் --இப்படிச் சொல்லப் பார்த்தோமாகில் 
இவை --இந்தக் குணங்கள் 
பின்னும் --பின்னையும் 
வயிறு உள --தொலையாமல் உள்ளே இருக்கும் 
இவை அவன் துயக்கு --இவைகளே அவன் கலங்கப்  பண்ணுபவை (மற்றையோர்க்குக் கலக்கத்தை உண்டாக்குபவை)
====***====


If aberrations are noticeable (now and then) in the mental attitudes of the Amarars (Devas like Indira and Nitya Suris), who are noted for their clarity of knowledge and understanding, towards the supreme Lord, that is because the wonders (of His incarnations) exceed the bounds of the expansive sky and thus baffle them. Be that as it may, I shall unfailingly, bow before the lovely feet of the cloud-hued Lord, which spanned the entire universe, embrace and extol them, with a mind wholly detached from everything else.

துயக்கு அறு --கலக்கமற்ற 
மதியில் --நெஞ்சில் பிறந்த 
நல் ஞானத்துள் --நல்ல ஞானத்தை உடையரான 
அமரரை --தேவர்களையும் 
துயக்கும் --கலங்கப் பண்ணுகிற 
மயக்கு உடை --மயக்குகிற வல்லமை உடைய 
மாயைகள் --அவதார ஆச்சரியங்கள் 
வானிலும் --எல்லையற்ற ஆகாசத்தைக் காட்டிலும் 
பெரியன வல்லன் --பெரியனவாகச் செய்ய வல்லவனாய் 
புயல் --நீல மேகம் போலே 
கரு நிறத்தனன் --கரு நிறத்தை உடைய எம்பெருமானுடைய 
பெரு நிலம் கடந்த --பெரிய பூமிப் பரப்பை எளிதாக அளந்த 
நல் --விலக்ஷணமான 
அடி போது --திருவடித் தாமரைகளை 
அமர்ந்து --வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து 
அயர்ப்பு இலன் --மறப்பில்லாதவனாய் 
அலற்றுவன் --முறை மாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன் 
தழுவுவன் --ஆலிங்கனம் பண்ணுவேன் 
வணங்குவன் --தலையாலே வணங்குவேன் 
====***====


Those that are conversant with these ten songs, out of the thousand, sweetly sung ( which are rich and resourceful in the adoration of the Lord, who churned the milk-ocean with surging waves that elicited admiration and deep reverence from the Devas) as a piece of Divine Service, by Sadagopan of Kurugur, will get released from the firm and formidable grip of births and join the band of Holy Devas in the high Heavens

அமரர்கள் --தேவர்கள் 
தொழுது எழ --சேவித்து விருத்தியை அடைய 
அலை கடல் --அலையெறிகின்ற திருப்பாற்கடலை 
கடைந்தவன் தன்னை --கடைந்தவனான சர்வேஸ்வரனைக் குறித்து 
அமர் --பொருந்தின 
பொழில் வளம் --சோலை வளமுள்ள 
குருகூர் --திருக்குருகூரில் அவதரித்த 
சடகோபன் --ஆழ்வாருடைய 
குற்றேவல்கள் --(வாக்கினால் ஆகிய ) கைங்கரியமான 
அமர் சுவை --சுவை அமைந்த 
ஆயிரத்து அவற்றினுள் --ஆயிரம் பாடலுக்குள் 
இவை பத்தும் --இந்தப் பத்துப் பாசுரமும் 
வல்லார் --கற்க  வல்லவர்கள் 
அமரரோடு --நித்ய சூரிகளோடு 
உயர்வில் --பரம பதத்தில் 
சென்று --சேர்ந்து 
தம் பிறவி --தம் பிறப்பாகிற  
அம் சிறை --உறுதியான பந்தங்களில் இருந்தும் 
அறுவர் --நீங்கப் பெறுவர் 


====***End of Third decad***====





2 comments: